ஆ. ராசா: விவசாயிகளின் விருப்பமின்றி நிலத்தை கையகப்படுத்த மாட்டோம்

ஆ. ராசா: விவசாயிகளின் விருப்பமின்றி நிலத்தை கையகப்படுத்த மாட்டோம்

1 mins read

கோவை: கோவை மாவட்­டம், அன்­னூ­ரில் தொழில் பூங்கா அமைக்க 3,731 ஏக்­கர் விவ­சாய விளை­நி­லத்தை கைய­கப்­ப­டுத்த உள்­ள­தாக அர­சாணை வெளி­யிடப்­பட்­டுள்­ளது.

இதற்கு அப்­ப­குதி மக்­கள் எதிர்ப்புத் தெரி­வித்து பல்­வேறு போராட்­டங்­க­ளை­யும் நடத்தி வரு­கின்­ற­னர்.

'நமது நிலம் நமதே' என்ற பெய­ரில் போராட்­டக் குழு ஒன்றும் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

15 கிரா­மங்­களில் அலு­வ­ல­கங்­கள் திறக்­கப்­பட்­டுள்­ளன. அரசு அதி­கா­ரி­கள் நிலம் கைய­கப்­ப­டுத்த வந்­தால் அதைத் தடுக்­கவே அலு­வ­ல­கங்­கள் திறக்­கப்­பட்­டுள்­ள­தாக பேராட்­டக் குழு­வி­னர் கூறி­னர்.

இந்­நி­லை­யில், அன்­னூர் சுற்று வட்­டா­ரப் பகு­தி­களில் தொழில் பூங்கா அமைக்க விவ­சா­யி­க­ளின் விருப்­பம் இல்­லா­மல் எக்­கா­ர­ணம் கொண்­டும் எந்த ஒரு நில­மும் கைய­கப்­ப­டுத்­தப்­ப­டாது என நீல­கிரி தொகுதி மக்­க­ளவை உறுப்­பி­னர் ஆ.ராசா கோைவயில் செய்தியாளர்­க­ளி­டம் தெரி­வித்­துள்­ளார். விவ­சா­யி­க­ளின் அச்­சத்­தைப் போக்க தெளி­வான முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார். டிட்கோ நிறு­வ­னத்­தின் நிலங்­களை மட்­டும் பயன்­ப­டுத்தி தொழில்­பூங்கா அமைக்­கப்­பட உள்­ளது. யாரா­வது நிலத்தை வாங்­கிக் கொள்­ளும்­படி கூறி­னால் மட்­டுமே அந்த நிலத்தை வாங்­கிக்­கொள்­வது என முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. விவ­சா­யம் செய்யப்படும் விவசாயிக­ளின் நிலங்­கள் எதை­யும் அவர்­க­ளின் அனு­மதி இன்றி எடுப்­ப­தில்லை என்­பதில் திட்­ட­வட்­ட­மாக தமி­ழக அரசு உள்­ளது என்­றும் அவர் கூறி­னார்.

அன்­னூ­ரில் அமை­யும் தொழிற்­பூங்­கா­வில் உள்­ளூர் மக்­க­ளுக்கு வேலை கிடைக்­கும் என்­றும் நிலங்­களை மாசுப­டுத்­தும் தொழிற்­சாலை­கள் அப்பகு­தி­யில் அமை­யாது என்றும் கூறி­யுள்­ளார்.