மீனம்பாக்கம்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பேங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 14 உயிரினங்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த விலங்கினங்களுக்கான உரிய சான்றிதழ்கள் சென்னை பயணியிடம் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப் பட்டன.
மொத்தமாக எட்டு பறக்கும் அணில்கள், மூன்று சிறிய குரங்கு குட்டிகள், மூன்று ராட்சத பல்லிகளை அவர் கொண்டு வந்திருந்தார்.

