அமைச்சரவையில் உதயநிதிக்கு 10வது இடம்

அமைச்சரவையில் உதயநிதிக்கு 10வது இடம்

2 mins read
b17d67b5-a905-426f-bafb-addb4fa29932
-

சென்னை: தமி­ழக அமைச்­ச­ர­வை­யில் உத­ய­நி­திக்கு 10வது இடம் கிடைத்­துள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

மூத்த அமைச்­சர்­க­ளைப் பின்­னுக்­குத் தள்ளி அவர் 10வது இடத்­துக்கு முன்­னே­றி­யி­ருப்­ப­தாக தக­வல் அறிந்த வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

முதல்­வர் மு.க. ஸ்டா­லி­னின் மக­னான உத­ய­நிதி ஸ்டா­லி­னுக்கு விளை­யாட்டு மேம்­பாடு மற்­றும் இளை­ஞர் நலன் துறை ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

அவ­ரைத் தொடர்ந்து அமைச்­சர்­கள் கே.என்.நேரு, ஐ.பெரி­ய­சாமி, க.பொன்­முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்­னீர்­செல்­வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராம­சந்­தி­ரன், தங்­கம் தென்­ன­ரசு ஆகி­யோர் அடுத்­த­டுத்த இடங்­களில் வரு­கின்­ற­னர். உத­ய­நி­திக்கு அடுத்­த­தாக 11ஆவது இடத்­தில் சட்­டத்­துறை அமைச்­சர் எஸ்.ரகு­பதி இடம்­பெற்­றுள்­ளார்.

மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் 23ஆவது இடத்­தி­லும் இந்து சமய அற­நி­லை­யத்­துறை பி.கே.சேகர்­பாபு 26வது இடத்­தி­லும் உள்­ள­னர்.

உத­ய­நி­தி­யின் நெருங்­கிய நண்­ ப­ரும் பள்­ளிக்­கல்­வித் துறை அமைச்­ச­ரு­மான அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி 30ஆவது இடத்­தில் உள்­ளார். மொத்­தம் 35 அமைச்­சர்­கள் உள்ள பட்­டி­ய­லில் ஆதி­தி­ரா­வி­டர் நலத்­துறை அமைச்­சர் கயல்­விழி செல்­வ­ராஜ் கடை­சி­யில் இருக்­கி­றார்.

சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக மட்­டும் இருந்­த­போது உத­ய­நிதி ஸ்டா­லி­னுக்கு சட்­ட­மன்­றத்­தில் முதல் ­வ­ருக்குப் பின்­னால் இரு வரிசை தள்ளி இட­ம­ளிக்­கப்­பட்­டது.

முதல்­வர் ஸ்டா­லின் காட்­டும்­போ­தெல்­லாம் அவ­ருக்­குப் பின்­னால் அவ­ரது மகன் உத­ய­நிதி இருப்­பது தெரி­யும்.

இந்த நிலை­யில் அமைச்­ச­ராக பத­வி­யேற்­றுள்­ள­தால் உத­ய­நி­தி­யின் இடம் சட்­ட­மன்­றத்­தில் மாற்­றப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே தனக்கு எதி­ராக எதிர்­ம­றை­யான விமர்­ச­னங்­கள் ஆரம்­பத்­தி­லி­ருந்தே வந்து கொண்­டி­ருப்­ப­தாக உத­ய­நிதி ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

"அமைச்­சர் பொறுப்பை சவா­லாக எடுத்­துப் பணியைச் சிறப்­பாக செய்­வேன். விமர்­ச­னங்­களை செய­லால் எதிர்­கொள்­வேன்." என்று உத­ய­நிதி ஸ்டா­லின் கூறி­னார்.

இந்த நிலை­யில் திருப்­ப­தி­யில் ஏழு­ம­லை­யானை குடும்­பத்­து­டன் தரி­சித்த நடி­கர் ரஜி­னி­காந்­தி­டம், உத­ய­நிதி ஸ்டா­லின் அமைச்­ச­ராக பொறுப்பு ஏற்­றது குறித்து செய்­தி­யா­ளர்­கள் கேள்­வி­யெ­ழுப்­பி­ய­தற்கு உத­ய­நி­திக்கு வாழ்த்­து­கள் என்று தெரி­வித்­துள்­ளார்.