சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 4ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் நேரமின்மை காரணமாக வழக்கை மறுநாள் தள்ளி வைக்கலாமா என்று நீதிபதிகள் கேட்டனர். அப்போது ஈ.பி.எஸ். தரப்பினர் கிறிஸ்மஸ் விடுமுறைக்குப் பின் தள்ளிவைக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அதிமுக வழக்கு ஒத்திவைப்பு
1 mins read

