திமுக மாடல் ஆட்சியின் வெப்பம் தாளாமல் மக்கள் துடிக்கின்றனர்: எடப்பாடி பழனிசாமி

திமுக மாடல் ஆட்சியின் வெப்பம் தாளாமல் மக்கள் துடிக்கின்றனர்: எடப்பாடி பழனிசாமி

2 mins read

சென்னை: திமுக மாடல் ஆட்­சி­யின் வெப்­பம் தாளா­மல் மக்­கள் துடிக்­கின்­ற­னர் என்று எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் அதி­முக இடைக்­கால பொதுச் செய­லா­ள­ரு­மான எடப்­பாடி பழ­னி­சாமி காட்­ட­மு­டன் கூறி உள்­ளார்.

திமுக குடும்­பத்­தின் ஆக்­டோ­பஸ் ஆட்­சி­யால் பாதிக்­கப்­படும் மக்­கள் கொதித்­தெ­ழுந்து ஆட்­சி­யா­ளர்­களை விரட்­டி­ய­டிப்­பார்­கள் என்­றும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

இது தொடர்­பாக அறிக்கை ஒன்றை அவர் வெளி­யிட்­டுள்­ளார்.

பொய்­யிலே பிறந்து, பொய்­யிலே வாழும் தமி­ழ­கத்­தின் முத­ல­மைச்­ச­ரும் அமைச்­சர்­களும் அவ­ருக்­குக் கீழ் பணி­யாற்­றும் ஒரு­சில உயர் அதி­கா­ரி­களும் அதி­முக ஆட்­சி­யில் துவக்­கப்­பட்ட, திட்­ட­மி­டப்­பட்ட திட்­டங்­களை, ஈர்த்த முத­லீ­டு­களை திமுக அரசு கொண்டு­வந்­த­தாக ஸ்டிக்­கர் ஒட்டி, இந்த கையா­லா­காத அர­சைக் காப்­பாற்ற முயற்­சிக்­கி­றார்­கள்.

கடந்த 19 மாத திமுக மாடல் ஆட்­சி­யின் வெப்­பம் தாங்­கா­மல் மக்­கள் துடித்து வரு­வது கண்­கூடு.

ஆனால், புதுச்­சே­ரிக்குச் சென்று திரு­மண விழா ஒன்­றில் பேசும் பொம்மை முத­ல­மைச்­சர் ஸ்டா­லின், மக்­கள் தொலை­பே­சி­யில் தன்­னைப் பாராட்­டு­வ­தாக தனக்­குத் தானே சுய­பெ­ருமை பேசு­கி­றார்.

தமி­ழ­கத்­தில் சட்­டம்-ஒழுங்கு சீர்­கேடு அடைந்­துள்­ள­தா­க­வும் தெரி­வித்த அவர், அதற்கு உதா­ர­ண­மாக சில சம்­ப­வங்­க­ளை­யும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

சென்னை முதல் ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், மண்­ட­பம் வரை உள்ள அத்­தனை சோத­னைச் சாவ­டி­க­ளை­யும் கடந்து, எந்­த­வித தடை­யு ­மின்றி சுமார் 160 கோடி ரூபாய் மதிப்­புள்ள போதைப் பொருள்­கள் மண்­ட­பம் வந்­தது எப்­படி? என்று மத்­திய வரு­வாய் புல­னாய்­வுத் துறை­யி­னர் ஆச்­ச­ரி­யப்­ப­டு­கின்­ற­னர்.

ஒரு­சில உயர் அதி­கா­ரி­க­ளின் துணை இல்­லா­மல் இந்­தக் கடத்தல் நடந்­தி­ருக்க முடி­யாது என்ற சந்தே­கம் இச்­செய்­தி­யைப் படிக்­கும் அனை­வ­ரி­ட­மும் எழுந்­துள்­ளது.

எனவே, இந்த திமுக அர­சின் காவல்துறை ``வாய்ச் சொல்­லில் வீர­ரடி'' என்று இல்­லா­மல், போதை மருந்து கடத்­தலை தடுக்க கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.