சென்னை: திருவண்ணாமலை மகாதீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலின் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகா தீபம் இம்மாதம் 6ஆம் தேதி கோயிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் 2668 அடி உயரம் கொண்ட மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் நேற்று 10வது நாளாக தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தது.
இந்த நிலையில், மகாதீபம் இன்று வெள்ளிக்கிழமை இரவுடன் நிறைவுபெறுகிறது. ஜனவரி 6ல் ஆருத்ரா தரிசனத்தின்போது, மகாதீப மை (தீபச்சுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவித்து பின்னர் பக்தர்களுக்கு தீப மை வழங்கப்படும்.

