தவறான அமைச்சரைப் பார்த்து விவரம் கேட்கிறீர்கள்: ஜெய்சங்கர்

தவறான அமைச்சரைப் பார்த்து விவரம் கேட்கிறீர்கள்: ஜெய்சங்கர்

2 mins read

நியூ­யார்க்: உல­கத்­துக்­குப் பெரும் சவா­லாக உள்ள பயங்­க­ர­வா­தத்தை அனைத்து நாடு­களும் ஒன்றி ணைந்து ஒரு முடி­வுக்­குக் கொண்டு வர வேண்­டும் என மத்­திய வெளி யுறவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­கர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

ஐ.நா. பாது­காப்பு மன்­றத்­தில் 15 உறுப்பு நாடு­கள் உள்­ளன. இந்த அமைப்­புக்கு மாதத்­துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்­கும் நிலையில், டிசம்­பர் மாதத்­துக்கு இந்­தி­யா­வின் சார்­பில் ஜெய்­சங்­கர் தலைமை தாங்­கி­னார்.

அப்­போது உரை­யாற்­றிய அவர், "இவ்­வு­ல­கம் பாகிஸ்­தானை பயங்­கரவாதத்­தின் மையப்­புள்­ளி­யா­கப் பார்க்­கிறது என்­றும் பயங்­க­ர­வா­தம் எங்­கி­ருந்து உரு­வா­கிறது என்­பதை உலக நாடுகள் தெளி­வா­க தெரிந்து வைத்துள்­ளன," என்­றும் கூறி­னார்.

அப்­போது இடை­ம­றித்த பாகிஸ் தானிய பத்­தி­ரி­கை­யா­ளர் ஒரு­வர், "இன்­னும் எத்­தனை காலத்­துக்­குத் தான் டெல்லி, காபூல், பாகிஸ்­தா­னில் இருந்து பயங்­க­ர­வா­தம் உரு­வா­குவதாக தெற்­கா­சியா பார்க்­கப்­போ­கிறது," எனக் கேட்­டார்.

அதற்கு, "இந்­தக் கேள்­வியை நீங்­கள் தவ­றாக என்­னி­டம் கேட்டு விட்­டீர்­கள். இதனை நீங்­கள் பாகிஸ்தான் அமைச்­ச­ரி­டம்­தான் கேட்கவேண்­டும். அவ­ரால்­தான் உங்­க­ளது கேள்­விக்கு தெளி­வான விளக்­கம் அளிக்­க­மு­டி­யும்," என அமைச்­சர் ஜெய்­சங்­கர் சுருக்­கென்று பதி­ல­ளித்தார்.

"இன்­னும் எத்­தனை காலத்­துக் குப் பயங்­கரவாதத்தை பாகிஸ்­தான் ஆத­ரிக்க விருப்­பம் கொண்­டுள்­ளது என்­ப­தற்கான சரி­யான பதி­லையும் பாகிஸ்­தான் அமைச்­சர்­ சொல்­வார்," என்­றும் கூறி­னார்.

தொடர்ந்து பேசிய அவர், "உல­கம் ஒன்­றும் முட்­டாள் அல்ல. அது எதை­யும் மறந்துவிடவில்லை. நிச்­ச­ய­மாக பயங்­கரவாதத்­தைத் தூண்டி ­வி­டும் நாடு­களை விட்­டு­வைக்­காது. நீங்­கள் யாரை­யும் இனி­மே­லும் குழப்­ப­மு­டி­யாது.

"மக்­க­ளுக்கு எல்­லாம் தெரி­யும். இனி­யா­வது திருந்­துங்­கள். ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க முயற்­சி செய்யுங்­கள்," என்­று தெரிவித்தவர், "உல­கின் மற்ற நாடு­கள் பொரு­ளா­தார வளர்ச்சி, முன்­னேற்­றம், மேம்­பாடு போன்றவற்­றுக்­காக முயன்று வரு­வது போல நீங்­களும் முய­ற்சி செய்யுங்கள்," என்று வலியுறுத்தியுள்­ளார் ஜெய்­சங்­கர்.