60,000 ஊழியர்கள் தங்க விடுதி
சென்னை: திருப்பெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் 60,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் வீடுகள், விடுதிகளைக் கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உற்பத்தி தடைபடாமல் இருக்கும் வகையில், தொழிற்சாலை வளாகத்திலேயே ஊழியர்களைத் தங்கவைக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது நிறுவனம்.
மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி
திருச்சி: மலேசியாவின் முட்டைத் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக முதன்முறையாக நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு 90,000 முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாக உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தலைவர் ஷோபனா குமார் தெரிவித்துள்ளார். மலேசியாவின் தரக்கட்டுப்பாட்டு சோதனைக்குப் பின்னர் இம்முட்டைகள் ஏற்றுக்கொள்ளப் படும் சூழலில், நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு ஏற்றுமதியாகும் முட்டைகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தரிசனக் கட்டணம் படிப்படியாக ரத்து
சென்னை: தமிழகக் கோயில்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து சிறப்புத் தரிசனக் கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வைகுண்ட ஏகாதசிக்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்புத் தரிசன டிக்கெட் விலை ரூ.200ல் இருந்து ரூ.100ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

