ஸ்டாலின்: தமிழ்ப் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

ஸ்டாலின்: தமிழ்ப் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

1 mins read

சென்னை: இசை மன்­றங்­கள் தமிழ்ப் பாடல்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­க­வேண்­டும் என முதல்­வர் ஸ்டா­லின் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

சென்னை 'மியூ­சிக் அகா­டமி' யின் 96வது மாநாடு, இசை­விழா வில் கலை­ஞர்­க­ளுக்கு விருது களை வழங்கி உரை­யாற்­றிய அவர், "விரு­து­பெற்ற அனை­வரும் தங்­க­ளைப் போன்று பல திற­மை­சா­லி­களை உரு­வாக்­க­வேண்­டும்," எனக் கேட்­டுக்­கொண்­டார்.

இசைக் கலை அமைப்­பு­கள் பொழு­து­போக்கு அமைப்­பு­கள் அல்ல என்­றும் அவை கலை வளர்க்­கும் பண்­பாட்டு அமைப்­பு­கள் என்­றும் தெரி­வித்த ஸ்டா­லின், 'மியூ­சிக் அகா­டமி' போன்ற கலை அமைப்­பு­கள் தமிழ்ப் பாடல்­களுக்கு முக்­கி­யத்­து­வம் வழங்­க­வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

தமிழ் இலக்­கி­யங்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ்ப்­பா­டல்­கள் உள்­ள­தைச் சுட்­டிக்­காட்­டிய அவர், அப்பாடல்­கள் இசை மன்­றங்­களில் தவ­றாது ஒலிக்­க­வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொண்­டார்.

"இசை வளா்த்­தல் என்­பது கலை வளா்த்­தல் மட்­டு­மல்ல, தமிழ் வளா்த்­த­லும்­தான். இதை மன­தில் வைத்து அனைத்­துக் கலை­ஞா்­களும் கலை அமைப்­பு­களும் செயல்­பட வேண்­டும்.

"மொழி இருக்­கும்­வ­ரை­தான் கலை இருக்­கும். பக்தி இசை, திரை­யிசை, மெல்­லிசை, 'பாப்' இசை, 'ராக்' இசை என எந்த இசை­யாக இருந்­தா­லும் அவை தமி­ழி­சை­யாக இருக்­க­வேண்­டும் என்­பதே எனது வேண்­டு­கோள்," என ஸ்டா­லின் தெரிவித்தார்.