சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் தலைநகர் சென்னை முழுவதும் வசிக்கும் மக்களுக்கு ரூ.63 கோடி செலவில் 500 கட்டணமில்லா தூய்மைக் கழிவறைகளை அமைக்கும் இலக்கை நோக்கி சென்னை மாநகராட்சி பணிகளைத் தொடங்கியுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முதற்கட்டமாக ஒன்பது பொதுக் கழிவறைகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்தி உள்ளனர். வெளிச் சுவரில் ஓவியம், பெண்களுக்கான சானிடரி நாப்கின் வசதி, மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் சென்றுவர சாய்தளப் பாதை, தடையில்லா தண்ணீர் விநியோகம் என மேம்படுத்தப்பட்டுள்ளது.

