தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விலைபோவதால் குறி; போட்டித் தேதிகளும் அறிவிப்பு எட்டு ஜல்லிக்கட்டு காளை களவு

2 mins read
8c148f3a-80b4-4a93-9ccc-e5af82fd4fcd
-

மதுரை: தமிழகத்தில் இன்னும் ஒரு மாத காலத்தில் பாரம்பரிய ஜல்லிக் கட்டுப் போட்டிகள் களைகட்ட உள்ள சூழலில், மதுரையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் எட்டு ஜல்லிக்கட்டுக் காளைகள் களவு போயுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இந்தக் 'காளைத் திருடர்களை' தேடும் பணியில் காவலர்கள் இறங்கியுள்ளனர்.

போட்டியில் களமிறக்குவதற்காக பயிற்சியுடன், சத்துணவையும் நீண்ட நெடுநாள்களாக தங்களது காளைகளுக்கு அளித்துவந்த உரி மையாளர்கள் காணாமல்போன காளைகளால் கலங்கிப்போயுள்ளனர்.

தன் காளையைப் பறிகொடுத்த மூடுவார்பட்டி அழகப்பன் கூறுகை யில், "மஞ்சமலை சுவாமியை வழி படும் பங்காளிகளாக ஒன்று சேர்ந்து காளையை வாங்கி சொந்த மகனாக வளர்த்து வந்தோம். கடந்த சில ஆண்டுகளாக அலங்காநல்லூர், பாலமேடு போட்டிகளில் வெற்றி பெற்று தங்கம், வெள்ளி நாண யங்கள் உட்பட ஏராளமான பரிசு களை எங்கள் காளை வென்றுள்ளது. சந்தேகப் பேர்வழிகள் மயக்க ஊசி போட்டு, காளையின் நினைவைக் கலைத்து கடத்திச் சென்றுள்ளனர்," எனத் தெரிவித்துள்ளார்.

கோடாங்கிபட்டி லெட்சுமி கூறு கையில், "எங்கள் குலதெய்வத்தின் பெயரான முத்தையாவை காளைக் குச் சூட்டி, அதன்மீது எங்கள் குடும்பமே உயிராக இருந்துவந்தோம். முத்தையா ஏராளமான பரிசுகளை வென்றுள்ளான். இதுவரை யாரிட மும் பிடிபடாத அவனைத் திருடிச் சென்றுள்ளதால் மனம் உடைந்து போயுள்ளோம்," என்றார்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10,000 முதல் ஆக அதிகமாக ரூ.1 லட்சம் வரை கைமாறிய காளை கள் இப்போது ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விலைபோகும் சூழலில் களவு போயுள்ளன.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி கள் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் முறையே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடை பெற உள்ளதாக விழாக்குழு நிர் வாகிகள் அறிவித்துள்ளனர்.

ஜிபிஎஸ் கருவி பொருத்த கோரிக்கை

ஜல்லிக்கட்டில் களமிறங்கி வெளி யேறும் காளைகள் பல சமயங்களில் தொலை தூரத்துக்கு ஓடி காணாமல் போய்விடுவதால், அவற்றின் கழுத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என காளைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.