ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தில் 22 வயது பழங்குடியினப் பெண் ஒருவரை அவரது கணவரே வெட்டிக்கொன்று நாய்களுக்கு இரையாக்கி உள்ள கொடூரத் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா வால்கர் என்ற பெண் 35 துண்டங்களாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தப்படு கொலையைத் தொடர்ந்து நாட்டில் அதேபாணியில் ஆங்காங்கே கொலைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இப்போது, அதேபோன்ற மற்றொரு சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலம், சாஹிப்கஞ்ச் பகுதியில் நடந்துள்ளது.
தில்தார் அன்சாரி என்பவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், ரூபிக்காவை நேசிப்பதாகக் கூறி இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவரை இரண்டாவது திருமணம் செய்ததாகத் தகவல்கள் தெரி விக்கின்றன.
இந்நிலையில், ரூபிக்கா கடந்த ஒரு சில நாள்களுக்குள் காணாமல் போன நிலையில், அவரது பெற்றோர் பெண்ணைக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து ரூபிக்கா வசித்து வந்த வீட்டின் அருகே நாய்கள் எலும்புகளைக் கடித்து உண்பதைக் கண்ட உள்ளூர் மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், காவல்துறை யினர் எலும்புகளை மீட்டனர்.
"ரூபிக்காவின் 12 பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. உடலின் மேலும் சில பாகங்கள் இன்னும் கிடைக்க வில்லை. அவற்றை மோப்ப நாயின் உதவியுடன் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
"பெண்ணின் கணவர் தில்தார் அன்சாரி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் அவரது இரண்டாவது மனைவி," என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தகவல் கூறியுள்ளார்.

