புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் தட்டு ஏந்தி போவோர், வரு வோரிடம் எல்லாம் யாசகமாகப் பெற்ற ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ஜெகந்நாதர் கோயி லுக்கு நன்கொடையாக அளித் துள்ளார் 70 வயது மூதாட்டி.
ஏழ்மைக்கு மத்தியிலும் மூதாட்டியின் உதவும் மனப் பான்மை புல்பானி நகரில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் உள்ள புல்பானி பகுதியைச் சேர்ந்தவர் துலா போரா. ஏழ்மையான குடும்பத் தைச் சேர்ந்தவரான இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
அதன்பிறகு, யாருடைய ஆத ரவும் இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள கோவில் வாசலில் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தி வரு கிறார். தன் செலவுகள் போக மீதமுள்ள பணத்தை அங்கிருந்த ஒரு வங்கியில் சேமித்து வந்த நிலையில், அவரது வங்கிக் கணக் கில் உள்ள தொகை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிவிட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, புல்பானியில் உள்ள ஜெகந்நாதர் கோவிலுக்கு பணத்தை துலா போரா நன்கொடை யாக அளித்தார்.
கோவில் நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து கௌரவிக்கும் காணொளி டுவிட்டரில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. "நான் ஜெகந்நாதரிடம் சரணடைந்து விட்டேன். எனக்கு வேறு எதுவும் வேண்டாம். அவர் என்னைக் கவ னித்துக்கொள்வார் என நம்புகி றேன்," என்கிறார் துலா போரா.
நான் ஜெகந்நாதரின் தீவிர பக்தை. வாழ்வின் கடைசிக் கட்டத்தில் உள்ளேன். எனக்கென்று யாரும் இல்லை, எந்த ஆசையும் இல்லை. உண்மையில், ஜெகந்நாதருக்கு என்னால் ஏதேனும் சேவை செய்ய முடிந்தால், இப்பூமியில் என் வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறியதாக உணர்வேன்.
யாசகமாக பெற்ற பணத்தை நன்கொடையாக அளித்த துலா போரா