ஆதரவற்ற குழந்தைகள் இலவச விமானப் பயணம்

ஆதரவற்ற குழந்தைகள் இலவச விமானப் பயணம்

1 mins read
10c2b428-7840-4e38-b39f-b5870c877643
-

கோவை: சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் வசித்து வரும் குழந்தைகள் கோவைக்கு விமானத்தில் பறந்து செல்வதை நினைத்து உற்சாகம் அடைந்தனர்.

ஆத­ர­வற்­றோர் இல்­லங்­களில் வசித்து வரும் குழந்­தை­க­ளின் 'விமா­னத்­தில் பறந்து பார்க்க வேண்­டும்' என்ற நீண்ட நாள் ஆசையை நிறை­வேற்­றும் வகை­யில், சென்­னை­யில் உள்ள 'ரெயின் டிராப்ஸ்' என்ற சமூக சேவை அமைப்பு ஒரு நாள் பய­ணத்­துக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

சென்­னை­யில் உள்ள சேவா­லயா, ஆனந்­தம், செஸ் உட்­பட இல்­லங்­களில் தேர்வு செய்­யப்­பட்ட 26 குழந்­தை­கள் விமா­னத்­தில் கோவைக்கு அழைத்து வரப்­பட்­ட­னர். இந்தப் பயணத்துக்கு சத்­ய­பாமா பல்­கலை உத­வி­யது.

கோவை விமான நிலை­யத்­தில் சிறார்களை மாவட்ட ஆட்சியர் சமீ­ரனும் மாந­க­ராட்சி ஆணையர் பிர­தாப்பும் வர­வேற்­ற­னர். கோவை­யில் அறி­வி­யல் மையம், ஜி.டி. நாயுடு அருங்­காட்­சி­ய­கம் உட்­பட பல இடங்­களை ரசித்த சிறுவர்கள் சென்­னைக்குத் திரும்­பி­னர்.