டெல்லியில் நடந்த செல்லப்பிராணிகள் திருவிழா

டெல்லியில் நடந்த செல்லப்பிராணிகள் திருவிழா

1 mins read
c898e5ba-aba4-4a27-9fd2-5eda8b8ecf34
-

இந்தியாவின் செல்லப்பிராணிகளுக்கான மிகப்பெரிய திருவிழாவான 'பெட் ஃபெட்' தலைநகர் டெல்லியில் நடந்தது. விழாவின்போது, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட விமானம் ஒன்றில் நாய் ஒன்றைத் தூக்கி வைத்துக்கொண்டு அதன் உரிமையாளர் அமர்ந்துள்ளார். நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாள்களுக்கு நடந்த விழாவில் செல்லப்பிராணிகளும் அதன் உரிமையாளர்களும் பங்கேற்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், செல்லப்பிராணிகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், பலதரப்பட்ட வேடிக்கையான நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஏற்கெனவே பயணிகள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் விமானத்தில் பயணம் செய்யலாம் என 'ஏர் இந்தியா', 'ஆகாசா ஏர்' ஆகிய இரண்டு விமான நிறுவனங்களும் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. படம்: இபிஏ