நடுவானில் பெண் பயணிக்கு நெஞ்சு வலி: சென்னையில் தரையிறங்கிய விமானம்

நடுவானில் பெண் பயணிக்கு நெஞ்சு வலி: சென்னையில் தரையிறங்கிய விமானம்

2 mins read

சென்னை: நடு­வா­னில் பறந்து கொண்­டி­ருந்­த­போது, பெண் பய­ணிக்கு ஏற்­பட்ட திடீர் நெஞ்சு வலி கார­ண­மாக விமா­னம் ஒன்று சென்னை விமான நிலை­யத்­தில் அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் சவூதி அரே­பி­யா­வின் ஜெட்டா நக­ரில் இருந்து மலே­சிய தலை­ந­கர் கோலா­லம்­பூ­ருக்­குப் பறந்து கொண்­டி­ருந்­தது அந்த விமா­னம். அதில் 378 பய­ணி­கள் இருந்­த­னர்.

அப்­போது மலே­சி­யா­வைச் சேர்ந்த 58 வய­தான ஜமீலா பிந்தி என்ற பெண்­ம­ணிக்கு திடீ­ரென நெஞ்­சு­வலி ஏற்­பட்­டது. அவர் வலி­யால் துடிப்­ப­தைக் கண்டு உடன் இருந்த குடும்­பத்­தார் பத­றிப்­போ­யி­னர்.

விமா­னப் பணிப்­பெண்­கள் ஜமீ­லா­வுக்கு முத­லு­தவி சிகிச்சை அளித்­த­னர். எனி­னும் நிலைமை மோச­ம­டை­யவே, தலைமை விமா­னிக்கு விவ­ரம் தெரி­விக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக விமா­னத்தை தரை­யி­றக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டார்.

அச்­ச­ம­யம் அந்த விமா­னம் இந்­திய வான் பறப்­பில் பறந்து கொண்­டி­ருந்­தது. எனவே அவர் சென்னை விமான நிலைய கட்­டுப்­பாட்டு அறை­யைத் தொடர்பு கொண்டு விவ­ரம் தெரி­வித்­தார். அதன் பின்­னர் விமா­னம் தரை­யி­றங்க அனு­மதி அளிக்­கப்­பட்­டது. மேலும், அந்­தப் பய­ணிக்கு சிகிச்சை அளிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டன.

அந்த விமா­னம் சென்னை மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்­தில் தரை­யி­றக்­கப்­பட்­ட­தும், ஜமீலா பிந்தி அங்கு காத்­தி­ருந்த ஆம்­பு­லன்ஸ் வாக­னத்­தில் ஏற்­றப்­பட்டு, உட­ன­டி­யாக அரு­கில் உள்ள மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டார்.

அவ­ரு­டன் பய­ணம் மேற்­கொண்ட குடும்ப உறுப்­பி­னர்­கள் இரு­வ­ரும் உடன் இருக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­ட­தால், இரு­வ­ருக்­கும் அவ­ச­ர­கால மருத்­துவ விசா வழங்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து 375 பய­ணி­களு­டன் அந்த விமா­னம் மீண்­டும் கோலா­லம்­பூ­ருக்கு புறப்­பட்டுச் சென்­றது.