காலில் விழுந்த பாமக எம்எல்ஏ

காலில் விழுந்த பாமக எம்எல்ஏ

1 mins read

சேலம்: பாமக எம்எல்ஏ அருள், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து ஆசி பெற்றது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பழனிசாமி பங்கேற்றபோது, எம்எல்ஏ அருள் இவ்வாறு செய்தார். அவர் அதிமுகவில் இணைவாரா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.

பாமக தலைமையும் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.