சென்னை: சேகர் ரெட்டி மகளுக்குத் திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சேகர் ரெட்டியின் குடும்பம் அதிர்ச்சி அடைந்து உள்ளது. தமிழ்நாடு அரசியலில் 2016- 2017 சமயங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்தவர் சேகர் ரெட்டி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சேகர் ரெட்டி சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக சிபிஐ, வருமானவரித்துறை அமலாக்கத்துறை சார்பாக வழக்குகள் பதியப்பட்டன.
அதிர்ச்சியில் சேகர் ரெட்டி குடும்பம்
1 mins read

