சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ராகுல் காந்தியின் நடைப் பயணத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது புதிய தேர்தல் உத்தியாக விமர்சிக்கப் படுகிறது.
கமல்ஹாசனுக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால் காங்கிரசார் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வருகிற 24ஆம் தேதி டெல்லியில் ராகுல் நடத்தும் நடைப்பயணத்தில் கமல் 50க்கும் மேற்பட்ட தமது கட்சித் தொண்டர்களுடன் கலந்து கொள்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலாக இருப்பதால் தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிகிறது.
அதுவும் காங்கிரஸ் இருக்கும் அணி பலமான அணியாகவும் பா.ஜனதாவுக்கு மாற்றாகவும் இருக்கும் என்றும் அவர் நம்புகிறார்.
இதனால் காங்கிரசுடன் அவர் கைகோர்க்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.
கொள்கை ரீதியாக பாரதிய ஜனதாவுடன் உடன்பாடு வைத்துக்கொள்ள இயலாது என்பதால் காங்கிரசுடன் பயணிக்க முடிவு அவர் செய்து விட்டார். கமலின் வருகை காங்கிரசுக்குப் பலம் கொடுக்கும் என்று காங்கிரசும் எதிர்பார்க்கிறது.
ஒருவேளை இந்தக் கூட்டணி உறுதியாகிவிட்டால் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது.
கமல்ஹாசனின் புதிய உத்தி பற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, "ஜனநாயகத்தை விரும்புபவர் கமல். மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார். எனவேதான் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க அவர் விரும்பு கிறார்," என்று கூறினர்.

