சென்னையில் பரதநாட்டிய விழா

சென்னையில் பரதநாட்டிய விழா

1 mins read
283d4852-2127-4483-8b01-75a4b166e74f
-

சென்னை: இவ்­வாண்டு இந்­திய நாட்­டிய திரு­விழா மாமல்­ல­பு­ரம் கடற்­கரை கோயில் வளா­கம் மற்­றும் தீவுத் திடல் ஆகிய இடங்­களில் வரு­கிற 23ஆம் தேதி தொடங்கி, ஜன­வரி 12ஆம் தேதி வரை நடை­பெ­றும் என்று அமைச்­சர் ராமச்­சந்­தி­ரன் அறி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் நடை­பெற்ற சுற்­றுலா வளர்ச்சிக் கழ­கக் கூட்­டத்­தில் அவர் இந்த விவ­ரங்­களை வெளி­யிட்­டார்.

"பர­த­நாட்­டி­யம், மோகி­னி­யாட்­டம், மணிப்­பூரி, ஒடிசி, குச்­சிப்­புடி, கர­கம், காவடி, தப்­பாட்­டம், ஒயி­லாட்­டம் உள்­பட பல்­வேறு நட­னங்­கள், கிளா­ரி­னெட், சாக்­ஸ­போன், நாதஸ்­வ­ரம், தவில் உள்­ளிட்ட பல்­வேறு இசைக்­க­ரு­வி­க­ளின் இசை­யு­டன் இணைந்து 63க்கும் மேற்­பட்ட குழுக்­க­ளின் கண்­க­வர் கலை நிகழ்ச்­சி­கள் நடை­பெ­று­கிறது," என்­றார் அமைச்­சர். இந்­திய நாட்­டிய திரு­விழா நிகழ்ச்­சி­கள் முழு­வ­தும் தமிழ்­நாடு சுற்­றுலா வளர்ச்­சிக் கழ­கத்­தின் சமூக வலை­த்த­ளங்­க­ளின் மூலம் நேர­லை­யாக ஒளி­ப­ரப்ப ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் அமைச்­சர் ராமச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார்.