மீண்டும் கனமழை

மீண்டும் கனமழை

1 mins read

சென்னை: தமி­ழ­கம், புதுச்­சே­ரி­யில் இம்­மா­தம் 23, 24ஆம் தேதி­களில் கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ளது என இந்­திய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

இதன் கார­ண­மாக மீன­வர்­கள் தென்­மேற்கு வங்க கடல் மற்­றும் மன்­னார் வளை­கு­டா­விற்கு வரும் 22ஆம் தேதி வரை செல்ல வேண்­டாம் என்று அறி­வு­றுத்­தப் பட்­டுள்­ளது.

தெற்கு வங்க கட­லின் மத்­திய பகுதி மற்­றும் கிழக்கு இந்­தி­யப் பெருங்­க­ட­லில் குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வு பகுதி நீடிப்­ப­தாக இந்­திய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

இதன் எதி­ரொ­லி­யால் தமி­ழ­கம், புது­வை­யில் உள்ள கட­லோர பகு­தி­களில் வரும் 23, 24ம் தேதி­களில் கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ளது.