ஈபிஎஸ்ஸுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்;

ஈபிஎஸ்ஸுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்;

2 mins read
622a7eeb-772a-4460-a9c7-0ad0be38418f
-

அ.தி.மு­.க­.வின் இடைக்­கால பொதுச்­செ­ய­லா­ளர் எனக் குறிப்­பிட்டு எடப்­பாடி பழ­னி­சாமி (படம்) பெய­ரில் தாக்­கல் செய்­யப்­பட்ட வரவு­செ­லவுக் கணக்கை இந்­திய தேர்­தல் ஆணை­யம் தனது இணைய­த்த­ளத்­தில் அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி­யிட்­டுள்­ளது. இது ஓ.பன்­னீர்­செல்­வத்­தின் தரப்­பி­ன­ருக்குப் பின்­ன­டை­வா­கப் பார்க்­கப்­ப­டு­கிறது.

அதி­மு­க­வில் இரட்­டைத் தலைமை பிரச்­சினை ஏற்­பட்­டதை தொடர்ந்து, ஓ.பன்­னீர்­செல்­வம் மற்­றும் எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யில் இரு அணி­க­ளாக செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே சில மாதங்­க­ளுக்கு முன்பு நடை­பெற்ற அதி­முக பொதுக்­கு­ழு­வில் இடைக்­கா­லப் பொதுச்­செ­ய­லா­ள­ராக எடப்­பாடி பழனி­சாமி தேர்வு செய்­யப்­பட்­டார். அந்த பொதுக்­கு­ழு­வி­லேயே ஒருங்­கி­ணைப்­பா­ளர் பதவி கால­வ­தி­யாகி விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­ட­து­டன், ஓ.பன்­னீர்­செல்­வத்­தின் பொரு­ளா­ளர் பத­வி­யும் பறிக்­கப்­பட்­டது.

கட்­சி­யின் உரிமை தொடர்­பாக சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் தொட­ரப்­பட்ட வழக்கு எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு ஆத­ர­வாக தீர்ப்பு வந்­ததை அடுத்து, ஓபி­எஸ் தரப்­பில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீட்டு வழக்கு தற்­போது நடை­பெற்று வரு­கின்­றது.

மேலும், எடப்­பாடி பழ­னி­சாமி தரப்­பில் பொதுக்­குழு தீர்­மா­னங்­கள் இந்­திய தேர்­தல் ஆணை­யத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட நிலை­யில், தீர்­மா­னத்தை ஏற்­றுக் கொள்­ளக்­கூ­டாது என்று ஓபி­எஸ் தரப்­பி­லும் தேர்­தல் ஆணை­யத்­தில் வலி­யு­றுத்­தப்­பட்­டது. இந்­நி­லை­யில், கடந்த அக்­டோ­பர் 3ஆம் தேதி இடைக்­கால பொதுச்­செ­ய­லா­ளர் எனக் குறிப்­பிட்டு எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் கடி­தத்­தில் 2021-2022ஆம் ஆண்­டிற்­கான அதி­முக வர­வு­செ­ல­வுக் கணக்கு தேர்­தல் ஆணை­யத்­தி­டம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வர­வு­செ­லவு கணக்கை ஏற்­றுக்­கொண்ட இந்­திய தேர்­தல் ஆணை­யம் தனது அதி­கா­ர­பூர்வ இணை­ய­த்த­ளத்­தில் இபி­எஸ் தரப்பு ஆவ­ணங்­களைப் பதி­விட்­டுள்­ளது. அதில், எடப்­பாடி பழ­னி­சாமி பெய­ரில் அதி­முக தரப்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட வரு­மான வரித்­துறை கடி­த­மும் இணைக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­மூ­லம், அதி­முக இடைக்­கால பொதுச்­செ­ய­லா­ள­ராக எடப்­பாடி பழ­னி­சா­மியை இந்­திய தேர்­தல் ஆணை­ய­மும், வரு­மான வரித்­து­றை­யும் அங்­கீ­க­ரித்­துள்­ள­தாக அர­சி­யல் விமர்­ச­கர்­கள் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

ஓ.பன்னீர்செல்வம்

யார் உண்­மை­யான அ.தி.மு.க. என்ற சண்டை எடப்­பாடி பழ­னி­சாமி, ஓ.பன்­னீர் செல்­வம் இடையே நீடித்து வரு­கிறது.

இந்த சூழ்­நி­லை­யில் ஓ.பன்­னீர்­செல்­வம் தனது ஆத­ரவு மாவட்டச் செய­லா­ளர்­கள் கூட்­டத்தை நேற்று சென்­னை­யில் கூட்டி கலந்து ஆலோ­சித்­தார்.

500க்கும் மேற்­பட்ட ஓபி­எஸ் தரப்பு மாவட்டச் செய­லா­ளர்­கள், கழக நிர்­வா­கி­கள் மற்­றும் சார்பு அணி நிர்­வா­கி­கள் இந்தக் கூட்­டத்­தில் பங்­கேற்­ற­னர்.

செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த ஓ.பன்­னீர் செல்­வம், "எங்­க­ளுக்கே இரட்டை இலைச் சின்­னத்தை தேர்­தல் ஆணை­யம் வழங்­கும். பொதுக்­குழு முறை­யாக நடை­பெ­றும், அதற்­கான அறி­விப்பு வெளி­யி­டப்­படும். இறுதி வெற்றி எங்­க­ளுக்குத் தான்," என்றார். 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் எங்­கள் தலை­மை­யில்­தான் கூட்­டணி அமை­யும் என்று ஓபிஎஸ் தெரி­வித்­துள்­ளார்.

இந்த ஆலோ­சனைக் கூட்­டத்­தில் ஓ.பன்­னீர்­செல்­வம் மீண்­டும் அதி­மு­க­வின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ராகத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வார் என தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்டு தேர்­தல் ஆணை­யத்­துக்கு அனுப்பி வைக்­கப்­படும் என தக­வல் வெளி­யா­கி­யி­ருக்­கிறது.