தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கையைச் சேர்ந்த 9 பேருக்கு நீதிமன்றக் காவல்

2 mins read

சென்னை: திருச்சி சிறப்பு முகா­மில் ஆயு­தக் கடத்­தல் வழக்­கில் கைது செய்­யப்­பட்ட இலங்­கை­யைச் சேர்ந்த 9 பேரை, ஜன­வரி 3ஆம் தேதி வரை நீதி­மன்­றக் காவ­லில் புழல் சிறை­யில் அடைக்க சென்­னை­யில் உள்ள தேசிய புல­னாய்­வுத் துறை­யின் (என்­ஐஏ) சிறப்பு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

குற்­றச் செயல்­களில் ஈடு­படும் வெளி­நாட்­ட­வர்­க­ளைத் தங்க வைப்­ப­தற்­காக திருச்சி மத்­திய சிறை வளா­கத்­தில் சிறப்பு முகாம் செயல்­பட்டு வரு­கிறது.

இங்கு இலங்கை தமி­ழர்­கள் 80 பேர் உட்­பட பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த 132 பேர் தங்­க­வைக்­கப்­பட்டு உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­துக்குப் புத்­து­யி­ரூட்­டும் வகை­யில், பாகிஸ்­தா­னி­லி­ருந்து இந்­தியா மற்­றும் இலங்­கைக்கு ஆயு­தங்­கள், போதைப் பொருள்­கள் கடத்­தப்­படு­வ­தாக எழுந்த குற்­றச்­சாட்டு தொடர்­பாக என்­ஐஏ அதி­கா­ரி­கள் கடந்த ஜூலை 8ஆம் தேதி தாமாக முன்­வந்து வழக்குப் பதிவு செய்­த­னர்.

இதைத்­தொ­டர்ந்து, தமி­ழ­கத்­தில் திருச்சி, சென்னை, திருப்­பூர், செங்­கல்­பட்டு உட்­பட 22 இடங்­களில் என்­ஐஏ அதி­கா­ரி­கள் ஜூலை 20ஆம் தேதி சோதனை நடத்­தி­னர்.

திருச்சி சிறப்பு முகா­மில் நடந்த சோத­னை­யின்­போது அங்­கி­ருந்து கைத்­தொ­லை­பே­சி­கள், சிம் கார்­டு­கள், பென்­டி­ரைவ், ஹார்ட் டிஸ்க், மடிக்­க­ணினி ஆகி­யவை கைப்­பற்­றப்­பட்­டன.

அதன் அடிப்­ப­டை­யில் திருச்சி சிறப்பு முகா­மி­லி­ருந்த இலங்­கை­யைச் சேர்ந்த குண­சே­க­ரன் என்ற பிரேம்­கு­மார், புஷ்­ப­ராஜா என்ற பூக்­குட்டி கண்ணா, முக­மது ஆஸ்­மின், அழக பெரு­மக சுனில் காமினி பொன்­சேகா என்ற கோட்ட காமினி, ஸ்டான்லி கென்­னடி பெர்­னான்டோ என்ற பொம்மா, தனுகா ரோஷன், லடியா, காமேஷ் சுரங்கா பிர­தீப் என்ற வெள்ள சுரங்கா, திலீ­பன் ஆகிய 9 பேர் ஐஎன்ஐ அதி­கா­ரி­க­ளால் கைது செய்­யப்­பட்­ட­னர்.