'விளையாட்டுத் துறையில் தமிழகத்தை சிறக்க வையுங்கள்'

'விளையாட்டுத் துறையில் தமிழகத்தை சிறக்க வையுங்கள்'

1 mins read
09fb23f8-8c68-43bc-bef4-39343e02359e
-

குரோம்­பேட்டை: தமி­ழ­கத்தை விளை­யாட்­டுத்­து­றை­யில் இந்­தி­யா­வின் தலை­சி­றந்த மாநி­ல­மாக மாற்­றும்­படி அத்­து­றை­யின் அமைச்­ச­ரா­கப் புதி­தா­கப் பத­வி­யேற்­றி­ருக்­கும் உத­ய­நிதி ஸ்டா­லினை மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் தலை­வர் என்.சங்­க­ரய்யா வாழ்த்­துத் தெரி­வித்­துள்­ளார்.

இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை அமைச்­ச­ராக உத­ய­நிதி ஸ்டா­லின் அண்­மை­யில் பொறுப்­பேற்­றார். இத­னை­யொட்டி விடு­த­லைப் போராட்ட வீர­ரும் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மூத்த தலை­வ­ரு­மான என்.சங்­க­ரய்­யாவை குரோம்­பேட்­டை­யில் உள்ள அவ­ரது இல்­லத்­தில் உத­ய­நிதி நேற்று சந்­தித்­தார்.

அப்­போது, "இந்­தி­யா­வின் சார்­பில் தமி­ழ­கத்­தி­லி­ருந்து ஒலிம்­பிக் போட்­டி­யில் பங்­கேற்­கும் வீரர்­கள், பதக்­கங்­களை வெல்­லும் வகை­யில் பயிற்சி அளி­யுங்­கள். அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் விளை­யாட்­டுத் துறையை மேம்­ப­டுத்­துங்­கள். நீங்­கள் நிர்­வ­கிக்­கும் அனைத்­துத் துறை­க­ளி­லும் வெற்­றி­க­ர­மாக செயல்­பட வாழ்த்­து­கள் என்று கூறி, கேரள முன்­னாள் முதல்­வ­ரும் மார்க்­சிய அறி­ஞ­ரு­மான இஎம்­எஸ் நம்­பூ­தி­ரி­பாட் எழு­திய புத்­த­கம் ஒன்றைப் பரி­சாக அளித்­தார்.