சென்னை: தமிழத்தில் நேற்று ஒரே நாளில் 2,604 பேரின் குறைகள் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
புதன்கிழமைதோறும் பொது மக்களிடம் குறைகள் கேட்டு மனுக் கள் வாங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 2,604 பேரை காவல்துறை யினர் சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி வாரந்தோறும் புதன் கிழமை அன்று அனைத்து காவல் ஆணையர்களும் மாவட்ட காவல் சூப்பிரிடன்டெண்டுகளும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை வாங்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி நேற்று முதல் முறையாக தமிழகம் முழுவதும் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கும் நிகழ்வு அனைத்து காவல்துறை ஆணையர் அலுவலகங்களிலும் மாவட்ட காவல் சூப்பிரிடன்டெண்ட் அலுவலகங்களிலும் நடந்தது.
கோவையில் ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் ஒரு விழா போல மக்களை வரவழைத்து குறைகளைக் கேட்டனர்.
சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலும் நேற்று மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.
காவல்துறைக்கான குறைகள் கேட்டு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று சென்னை எழும்பூர் ராஜரத் தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
ஆணையர் நேரடியாக வந்து கலந்துகொண்டு காவலர்களின் குறைகளைக் கேட்டார்.
டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் நேற்று முன்தினம் தனது அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 2,604 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டதாகவும் உடனடியாக அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதாகவும் டி.ஜி.பி. அலுவலகத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்தது.

