சென்னை: அண்மையில் அமைச் சராகப் பதவியேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக அமைச் சர் என்ற நிலையில் பயணம் மேற் கொள்கிறார்.
இம்மாதம் 24ஆம் தேதி கோவைக்கு அவர் செல்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கோவை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.
தி.மு.க இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வரும் அவர் அமைச்சரவையில் இடம்பிடித்தார். கடந்த 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் வெளிமாவட்ட பயணமாக உதயநிதி ஸ்டாலின் வருகிற 24ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரு கிறார். விமான நிலையத்தில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
அன்று இரவு கோவையில் தங்கும் அவர், மறுநாள் 25ஆம் தேதி காலை நேரு அரங்கத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட ஓடுதள பாதையை திறந்து வைக்கிறார்.
இதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
பின்னர் மாலையில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கஉள்ளார்.

