'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

1 mins read
cf51b244-3dcf-4bf9-9499-313f6a656f6f
-

சென்னை: 'காலா பாணி' நாவலை எழு­தி­ய­தற்­காக எழுத்­தா­ளர் மு.ராஜேந்­தி­ர­னுக்கு சாகித்ய அகா­டமி விருது அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

தமிழ், மலை­யா­ளம், கன்­ன­டம் உள்­ளிட்ட முக்­கிய மொழி­களில் எழு­தப்­படும் சிறந்த இலக்­கி­யம் சார்ந்த நாவல்­க­ளுக்கு ஆண்­டு­தோ­றும் இந்­திய மத்­திய அரசாங் கம் சாகித்ய அகா­டமி விருது வழங்­கு­கிறது. இந்த நிலை­யில் தமி­ழ­கத்­தில் காளை­யார் கோவில் போரை முன்வைத்து எழு­தப்­பட்ட 'காலா பாணி' நாவ­லுக்கு இவ்­வாண்­டுக்­கான சாகித்ய அகா­டமி விருது அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ்­நாடு கூட்­டு­றவு சங்கத் தேர்­தல் ஆணை­ய­ராக பணி­புரிந்து ஓய்வு பெற்ற ஐஏ­எஸ் அதி­காரி ராஜேந்­தி­ரன் இந்த நாவலை எழு­தி­யுள்­ளார்.

இதற்கு முன்­னர் தமது எழுத்­துப் பணிக்­காக டான்­சீறி சோமா விருது, புது­மைப்­பித்­தன் படைப்­பி­லக்­கிய விருது உள்­ளிட்ட விருதுகளை அவர் பெற்­றுள்­ளார்.

இந்த நிலை­யில் 1801ஆம் ஆண்டு ஆறு மாதங்­கள் நடை­பெற்ற காளை­யார் கோவில் போரை முன் வைத்து காலா பாணி நாவலை அவர் எழு­தி­யுள்­ளார். நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை என்ற இந்த நாவலில் அன்றைய கால தமிழர் களின் வாழ்க்கை, சூழல், ஆங்கி லேயர்கள் மேற்கொண்ட நடவடிக் கைகள் இடம்பெற்றுள்ளன.