சென்னை: தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பணத்திற்குப் பதில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை முழு கரும்புடன் வழங்கப்பட்டது.
ஆனால் இவ்வாண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1,000 வழங்க முடிவு செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைகளுக்கு 1,000 ரூபாய் வழங்க நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பொங்கல் பரிசுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

