ராமதாஸ்: இலங்கையை எச்சரிக்க வேண்டும்

ராமதாஸ்: இலங்கையை எச்சரிக்க வேண்டும்

2 mins read

சென்னை: தமி­ழக மீன­வர்­கள் இனி­யும் கைது செய்­யாமல் இருக்க இலங்கை அர­சாங்­கத்தை எச்­ச­ரிக்க வேண்­டும் என்று பாட்­டாளி மக்­கள் கட்சி நிறு­வ­னர் ராமதாஸ் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக அறிக்கை ஒன்றை அவர் நேற்று வெளி­யிட்­டார்.

"வங்­கக்­க­ட­லில் கோடி­யக்­கரை அரு­கில் மீன்­பி­டித்­துக் கொண்­டி­ருந்த காரைக்­கால் மற்­றும் மயி­லா­டு­துறை மாவட்ட மீன­வர்­கள் 12 பேரை சிங்­கள கடற்­படை கைது செய்­துள்­ளது. அவர்­க­ளின் படகு பறி­மு­தல் செய்­யப்­பட்டு உள்­ளது. சிங்­கள கடற்­ப­டை­யி­ன­ரின் அத்­து­மீ­றல் கண்­டிக்­கத்­தக்­கது.

"இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரால் தமி­ழக மீன­வர்­கள் கைது செய்­யப்­ப­டு­வது குறித்து இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் நாடா­ளு­மன்­றத்­தில் கவலை தெரி­வித்­தி­ருக்­கி­றார். இத­னால் பய­னில்லை. இலங்­கையை கண்­டிப்­ப­தும் எச்­ச­ரிப்­ப­தும்­தான் இத்­த­கைய அத்­து­மீ­றல்­களைத் தடுத்து நிறுத்­தும்.

"இலங்­கைப் படை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டுள்ள 12 மீன­வர்­க­ளை­யும் நூற்­றுக்­கும் மேற்­பட்ட பட­கு­க­ளை­யும் மீட்க மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். மீன­வர் சிக்­க­லுக்­குத் தீர்வு காண இரு­த­ரப்பு மீன­வர்­க­ளின் பேச்­சுக்கு மத்­திய, மாநில அர­சு­கள் ஏற்­பாடு செய்ய வேண்­டும்," என்று அறிக்­கை­யில் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

"பொது­வாக தமி­ழக மீன­வர்­கள் வங்­கக்­க­ட­லில் மீன்­பி­டிக்­கும் போது, ஆழ்­க­டல் பகு­தியை நோக்­கிச் செல்­கின்­ற­னர். அப்­போது அனைத்­து­லக கடல் எல்லை அருகே செல்­லும் சூழல் உரு­வா­கிறது.

"இதை­ய­டுத்து கச்­சத்­தீவு, நெடுந்­தீவு பகுதிகளுக்கு அருகே தமி­ழக மீன­வர்­கள் வரு­வ­தா­க­வும் இலங்கை கடற்­ப­டை­யி­னர் குற்றம் ­சாட்­டு­கின்­ற­னர்.

"அது மட்­டு­மல்­லா­மல் கைது செய்­யப்­படும் தமி­ழக மீன­வர்­கள் தாக்­கு­த­லுக்­கும் ஆளா­கின்­ற­னர். மேலும் அவர்­க­ளது பட­கு­க­ளை­யும் பறி­மு­தல் செய்­து­வி­டு­கின்­ற­னர். இத­னால் தமி­ழக மீன­வர் ­க­ளின் வாழ்­வா­தா­ரம் தொடர்ந்து பாதிக்­கப்­ப­டு­கிறது.

"ஆனால், ஒன்­றிய அரசு இலங்கை நாட்­டு­டன் சமா­தான போக்­கையே காட்டி வரு­கிறது. எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டால் மட்­டுமே இந்­தப் பிரச்­சினை முடி­வுக்கு வரும்," என்று அவர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.