மூக்கு வழி தடுப்பு மருந்து இந்தியாவில் தொடக்கம்

மூக்கு வழி தடுப்பு மருந்து இந்தியாவில் தொடக்கம்

1 mins read

புதுடெல்லி: சீனா­வில் பரவி வரும் பிஎஃப் 7, பிஎஃப் 12 ஆகிய ஓமிக்­ரான் துணைக் கிரு­மி­கள் குஜ­ராத், ஒடிசா மாநி­லங்­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

குஜ­ராத்­தில் இரு­வ­ரும், ஒடி­சா­வில் ஒரு­வ­ரும் புதிய வகைக் கிரு­மி­க­ளால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். இத­னால், கிரு­மிப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­களை மத்­திய அரசு தீவி­ரப்­படுத்­தி­யுள்­ளது.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­களை விமான நிலை­யங்­களில் கண்­கா­ணிக்­க­வும் அவர்­களுக்கு ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­தனை மேற்­கொள்­ள­வும் அறி­வுறுத்­தப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க இந்­தி­யா­வில் 2021 ஜன­வரி 16 முதல் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது.

முதல் தவணை, இரண்­டாம் தவணை தடுப்­பூ­சி­யைத் தொடர்ந்து பூஸ்­டர் தடுப்­பூ­சி­யும் எல்லா மாநிலங்­க­ளி­லும் போடப்­பட்டு வரு­கிறது.

அதன் தொடர்ச்­சி­யாக மூக்கு வழி­யாக கிரு­மித் தடுப்பு மருந்து செலுத்­து­வ­தற்­கான அனு­ம­தியை மத்­திய அர­சாங்­கம் வழங்கி உள்­ளது.

பல்­வேறு கட்­ட­மா­கப் பரி­சோ­தித்த பிறகே இந்த மருந்­துக்­கான அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது. இந்த அனு­மதி நேற்று நடப்­புக்கு வந்­தது.

பாரத் பயோ­டெக் நிறு­வ­னம் தயா­ரித்­துள்ள இந்த மூக்கு வழி தடுப்பு மருந்து முதற்­கட்­ட­மாக தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் செலுத்த அனு­ம­திக்­கப்­ப­டு­கிறது.

கோவேக்­சின், கொவி­ஷீல்ட் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­ட­வர்­கள் அல்­லது எந்­த­வொரு கொவிட்-19 தடுப்­பூ­சி­யை­யும் இது­வரை போட்­டுக்­கொள்­ளா­த­வர்கள் மூக்கு வழி தடுப்பு மருந்தை எடுத்­துக்­கொள்­ள­லாம் என அறி­விக்­கப்­பட்டுள்­ளது.