ஐந்து தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திருடிய காவலர் கைது

ஐந்து தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திருடிய காவலர் கைது

2 mins read
15ab28b3-61c2-4b09-90dc-54c30c2b06d9
-

கோவை: வேலியே பயிரை மேய்ந்­தது போல மக்­க­ளுக்­குப் பாது­காப்பு வழங்­க­வேண்­டிய காவ­லர் ஒரு­வர், ஐந்து தொலைக்காட்­சிப் பெட்­டி­கள், கியாஸ் அடுப்பு, ரூ.47,000 ரொக்­கப்­ப­ணம் ஆகிய வற்­றைத் திரு­டிச்­சென்­றுள்­ளார்.

சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளின் புகா­ரைத் தொடர்ந்து காவ­ல­ரும் இந்­தக் குற்­றச்­செ­ய­லுக்கு உடந்­தை­யாக இருந்த அவ­ரது நண்­ப­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

உத்­த­ரப்­ பி­ர­தேச மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள் தாசிம், 27, சாருக், 30. இவர்­கள் இரு­வ­ரும் கோவை சிங்­கா­நல்­லூர் அருகே உள்ள வர­த­ரா­ஜ­பு­ரத்­தில் தங்­கி­யி­ருந்­த­படி தொலைக்­காட்சிப் பெட்­டி­கள், கியாஸ் அடுப்­பு­களை வீடு­வீ­டா­கச் சென்று வியா­பா­ரம் செய்து வந்­துள்­ள­னர்.

இதே­போல், கடந்த 20ஆம் தேதி தாசி­மும் சாருக்­கும் கண்­ணம் பாளை­யம் பகு­தி­யில் தொலைக் காட்­சிப் பெட்­டி­களை விற்­பனை செய்ய எடுத்­துச்­ சென்­றுள்­ள­னர்.

அப்­போது, அங்கு வந்த சூலூர் காவல்­நி­லை­யக் காவ­லர் முருக னும், 34, அவ­ரது நண்­பர் பிர­தீ­ஷும், 27, வியா­பா­ரி­க­ளைத் தடுத்து நிறுத்­தி­னர்.

"இவை திருட்டு தொலைக்­காட் சிப் பெட்­டி­கள் தானே? இவற்றை எங்கு கொண்டு செல்­கி­றீர்­கள்? சந்­தே­கம் உள்­ள­தால் உங்­களை விசா­ரிக்க வேண்­டும்," என வியா­பா­ரி­கள் இரு­வ­ரை­யும் அந்­தப் பகு­தி­யில் உள்ள வாக­னங்­கள் பழு­து­பார்க்­கும் கடைக்­குள் அழைத்­துச்­சென்று கட்­டிப்­போட்டு தாக்­கி­னர்.

அதன்­பி­றகு, காவ­லர் முரு­க­னும் பிர­தீ­ஷும் வியா­பா­ரி­கள் தங்கி இருக்­கும் வர­த­ரா­ஜ­பு­ரம் வீட்­டுக்கு வந்து, அங்கு விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்டு இருந்த தொலைக் காட்சிப் பெட்­டி­கள், கியாஸ் அடுப்பு, ரூ.47,000 பணம் ஆகி­ய­வற்றை கைப்­பற்றி தப்­பிச்சென்­ற­னர்.

இது­கு­றித்து தாசிம், சிங்­கா­நல்­லூர் காவல்­நி­லை­யத்­தில் புகார் செய்­ததை அடுத்து காவ­லர் முரு­கன், பிர­தீஷ் கைதாகி­னர்.