ஹரியானா மாநிலத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் திமுக எம்.பி. கனிமொழியும் நேற்று கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார். அவருடன் கரூர் எம்.பி. ஜோதிமணியும் கலந்துகொண்டு காங்கிரஸ் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமைப் பயணம் ஹரியானாவில் 107வது நாளை எட்டியுள்ளது. இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழி, "ஹரியானாவில் நடைபெறும் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்துகொண்டேன். இந்தியாவின் பன்மைத்துவத்தை உணர்ந்து அதனை ஒருங்கிணைக்கும் நோக்குடன் நடைபோடும் ராகுல் காந்தியுடன் இந்தப் பயணத்தில் நடந்ததில் மகிழ்ச்சி," எனப் பதிவிட்டுள்ளார். படம்: டுவிட்டர்

