'சிகிச்சை பெற வெளிநாடு செல்ல ஜெயலலிதாவுக்கு விருப்பமில்லை'

'சிகிச்சை பெற வெளிநாடு செல்ல ஜெயலலிதாவுக்கு விருப்பமில்லை'

1 mins read

சென்னை: ஜெய­ல­லிதா மர­ணத்­தி­லும் அவ­ருக்கு அளிக்­கப்­பட்ட சிகிச்­சை­யி­லும் மறைப்­ப­தற்கு ஒன்று­மில்லை என மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் தோழி சசி­கலா கூறி­யுள்ளார்.

"மேல் சிகிச்சை பெறு­வ­தற்­காக வெளி­நாடு செல்­வ­தற்கு தனக்கு விருப்பமில்லை என மருத்­து­வர்­களி­டம் கூறியதும் ஜெய­ல­லி­தா­தான். ஜெய­ல­லிதாவுக்கு எய்ம்ஸ், மாநில மருத்­து­வர்­கள் சிகிச்சை அளித்­த­னர். விரை­வில் குணமாகி வீடு திரும்புவோம் என்ற எண்ணத் தில் மருத்துவர்­க­ளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கவும் ஜெயலலிதா தயா­ராக இருந்­தார்," என்றும் சசி கலா தெரிவித்துள்ளார்.