பள்ளத்தில் விழுந்த கார்: பக்தர்கள் எட்டு பேர் பலி

பள்ளத்தில் விழுந்த கார்: பக்தர்கள் எட்டு பேர் பலி

2 mins read
1e8added-bd7e-463a-b83c-98b6f24f25be
-

சபரிமலைக்குச் சென்று திரும்பியபோது விபத்து; மூன்று பேர் நிலை கவலைக்கிடம்

தேனி: நாற்­பது அடி பள்­ளத்­தில் கார் கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­ன­தில் சப­ரி­மலை ஐயப்ப பக்­தர்­கள் எட்டு பேர் உயி­ரி­ழந்­த­னர். இந்­தச் சம்­ப­வம் கார­ண­மாக குமுளி பகு­தி­யில் சோகம் நில­வு­கிறது.

இந்த விபத்­தில் கார் ஓட்­டு­நர் உட்­பட மூன்று பேர் படு­கா­யங்­க­ளு­டன் மீட்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்கு மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

கேரள மாநி­லம், சப­ரி­ம­லை­யில் உள்ள ஐயப்ப கோவி­லுக்கு ஆண்­டு­தோ­றும் லட்­சக்­க­ணக்­கான பக்­தர்­கள் செல்­கின்­ற­னர். நவம்­பர் தொடங்கி ஜன­வரி மாதம் வரை வெளி மாநி­லங்­கள், வெளி­நா­டு­களில் இருந்து ஏரா­ள­மான பக்­தர்­கள் இக்­கோ­வி­லுக்கு வருகை புரி­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், தேனி மாவட்­டம், ஆண்­டிப்­பட்டி பகு­தி­யைச் சேர்ந்த ஐயப்ப பக்­தர்­கள் சிலர் இரு தினங்­க­ளுக்கு முன்­னர் சப­ரி­ம­லைக்­குச் சென்­றி­ருந்­த­னர். அங்கு சாமி தரி­ச­னம் முடிந்து நேற்று முன்­தி­னம் அவர்­கள் கார் ஒன்­றில் ஊர் திரும்­பிக் கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது, தமி­ழக, கேரள எல்­லை­யை­யொட்டி உள்ள குமுளி மலைப் பகு­தி­யில் சென்று கொண்­டி­ருந்த அந்­தக் கார் திடீ­ரென ஓட்­டு­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்து தாறு­மா­றாக ஓடத் தொடங்­கி­யது.

பின்­னர் மலைப் பாதை­யில் அமைந்­துள்ள மாதா கோவில் அருகே உள்ள நூறடி பள்­ளத்­தில் கவிழ்ந்­தது அந்­தக் கார். பள்­ளத்­தில் தலை­கீ­ழா­கப் பாய்ந்­த­து­டன், அங்கு அமைக்­கப்­பட்­டுள்ள பெரி­யாறு அணைக்­குச் செல்­லும் மிகப்­பெ­ரிய குழாய்­கள் மீது விழுந்­த­தில், அவை­யும் காரு­டன் சேர்ந்து உடைந்து நொறுங்­கின.

இந்த விபத்­தில் காரின் இடி­பா­டு­களில் சிக்கி, அதில் வந்த ஐயப்ப பக்­தர்­கள் எட்டு பேர் சம்­பவ இடத்­தி­லேயே உடல் நசுங்கி மாண்­டு­விட்­ட­னர்.

மீட்­புப் படை­யி­ன­ரும் விபத்து நிகழ்ந்த பகு­தி­யைச் சேர்ந்த பொது­மக்­களும் மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­போது, காரின் ஓட்­டு­நர், சிறு­வன் உட்­பட மூன்று பேர் உயி­ரு­டன் மீட்­கப்­பட்­ட­னர்.

மூவ­ரும் படு­கா­யங்­க­ளு­டன் மீட்­கப்­பட்­ட­தா­க­வும் தேனி அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மூவ­ருக்­கும் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.