708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

1 mins read

நாகர்­கோவில்: தமி­ழ­கத்­தில் புதி­தாக 708 நகர்ப்­புற நலவாழ்வு மையங்­கள் திறந்து வைக்­கப்­படும் என மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

இம்­மை­யங்­கள் அனைத்­தும் தமி­ழக முதல்­வ­ரால் ஒரே நாளில் திறந்து வைக்­கப்­படும் என்று நாகர்­கோ­வி­லில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கம் முழு­வ­தும் மருத்­து­வ­மனை­க­ளைப் போன்ற 708 நகர்ப்­புற நலவாழ்வு மையங்­கள் அமைக்­கப்­படும் என முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அறி­வித்­தி­ருந்­தார். அதன்­படி 21 மாந­க­ராட்சி, 63 நக­ராட்­சி­களில் இந்த நகர்ப்­புற நலவாழ்வு மையங்­கள் அமைக்­கப்­பட உள்­ளன.

ஒரு மருத்­து­வர், ஒரு மருந்­தா­ளு­னர், உத­வி­யா­ளர், உரிய மருத்துவ உப­க­ர­ணங்­கள் எனப் பல்­வேறு வச­தி­க­ளு­டன், இந்த நல­வாழ்வு மையங்­கள் இயங்­கும் என்­றும் பொங்­கல் பண்­டி­கைக்­குப் பிறகு ஒரே நாளில் 708 மையங்­க­ளை­யும் முதல்­வர் மு.க. ஸ்டா­லின் திறந்து வைப்­பார் என்­றும் அமைச்­சர் சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார்.

"தற்­போது சில நாடு­களில் பரவி வரும் உரு­மா­றிய கொரோனா தொற்று தொடர்­பாக தமி­ழக அரசு தீவிர கண்காணிப்பு, முன்னெச்­ச­ரிக்கை நட­வடிக்கைகளை மேற்கொண்டு வரு­கிறது.

"எனவே புதிய தொற்­றுப் பர­வல் குறித்து தமி­ழக மக்­கள் அச்சப்பட வேண்டி­ய அவசியம் இல்லை," என்று அமைச்சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறினார்.