1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் சிலை அதிரடியாக மீட்பு

1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் சிலை அதிரடியாக மீட்பு

1 mins read

தஞ்சை: கும்பகோணத்தில் இருந்து திருடிச் செல்லப் பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து அனுமன் கற்சிலை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேர் கைதாகி உள்ளனர்.

அங்குள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் இருந்த பழங்கால அனு மன் சிலை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது.

இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது.இந்நிலையில் கோவிலில் உள்ள கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகளை அக்டோபர் 2019 தொடக்கத்தில் இருந்து பகுப்பாய்வு செய்து பார்வையிட்டபோது, சந்தேகத்திற்குரிய வகையில் சிலர் நடமாடியது தெரியவந்தது.

இதையடுத்து திருவள்ளுர் மாவட்டம் தும்பிக்குளம் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது, தன் கூட்டாளியுடன் சேர்ந்து அனுமன் சிலையை வெளிநாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க அவர் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து நீலகண்டன் தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த சிலை மீட்கப்பட்டது.