அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை திடீர் பாதிப்பு

அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை திடீர் பாதிப்பு

1 mins read
843a3df4-71ce-455b-8682-e078e4c662a0
-

சென்னை: திடீர் உடல்­ந­லக் குறைவு கார­ண­மாக மூத்த அமைச்­சர் துரை­மு­ரு­கன் (படம்) தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்கப்­பட்­டுள்­ளார். அவ­ருக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக அரசு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

தமி­ழக நீர்­வ­ளத்­துறை அமைச்சர் துரை­மு­ரு­க­னுக்கு சனிக்­கி­ழமை நள்­ளி­ர­வில் திடீ­ரென உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­தாக அவ­ரது குடும்­பத்­தி­னர் தெரி­வித்­த­னர்.

இதை­ய­டுத்து அவர் தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் உட­ன­டி­யாக அனு­ம­திக்­கப்­பட்­டார்.

வயோ­தி­கம் கார­ண­மாக இது­போன்ற உடல் பாதிப்­பு­கள் ஏற்­ப­டு­வது வழக்­கம்­தான் என்­றும் அவர் நல­மாக இருப்­ப­தா­க­வும் மருத்து­வ­மனை தரப்பு தெரி­வித்­த­தாக ஊட­கச் செய்தி­யில் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதயப் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற துரைமுருகன், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகள் செய்து கொள்கிறார். தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.