சென்னை: பாரதியாரின் மகள் வழி பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 94.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆசிரியராகப் பணியாற்றிய அவர், பாரதியார் பாடல்களை இசை, நூல் வடிவமாக்கி, அவற்றைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றி வந்தார்.
லலிதா பாரதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தெரிவித்துள்ளார்.
லலிதா பாரதியின் மகனான ராஜ்குமார் பாரதியும் சிறந்த கர்நாடக இசைப் பாடகர் ஆவார்.

