ஜனவரி 6 முதல் 22 வரை: சென்னை புத்தகக் காட்சியில் 800 அரங்குகள் இடம்பெறும்

ஜனவரி 6 முதல் 22 வரை: சென்னை புத்தகக் காட்சியில் 800 அரங்குகள் இடம்பெறும்

2 mins read
739c0449-445c-4bd0-8d80-77d563c302aa
-

சென்னை: ஆண்­டு­தோ­றும் நடை­பெற்று வரும் சென்னை அனைத்­துலக புத்­த­கக்­காட்சி ஜன­வரி 6 முதல் 22ஆம் தேதி வரை நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புத்­த­கக்­காட்­சியை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தொடங்கி வைக்­கி­றார். சென்னை ஒய்­எம்­சிஏ திட­லில் புத்­த­கக்­காட்சி நடை­பெ­று­கிறது.

46வது புத்­த­கக்­காட்சி குறித்து தென்­னிந்­திய புத்­தக விற்­ப­னை­யா­ளர், பதிப்­பா­ளர் சங்­கத்­தின் (பபாசி) தலை­வர் எஸ்.வயி­ர­வன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில்,

தமி­ழக அர­சின் ஆத­ர­வு­டன் ஜன­வரி 16 தேதி முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாள்­கள் அதே வளா­கத்­தில் சென்னை அனைத்­து­ல­கப் புத்­த­கக்­காட்சி நடை­பெ­றும் என்­றார்.

"புத்­த­கக்­காட்­சிக்­காக 800 அரங்­கு­கள் அமைக்­கப்­பட்டு உள்­ளன. மேலும் மூன்று நாள்­கள் நடை­பெ­றும் அனைத்­து­லக புத்­த­கக்­காட்­சிக்கு என 30 குளி­ரூட்­டப்­பட்ட அரங்­கு­கள் தனி­யாக ஒதுக்­கப்­பட்டு உள்­ளன. அனைத்­து­லக காட்­சி­யில் நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட நாடு­களில் இருந்து பதிப்­பா­ளர்­கள் பங்­கேற்க உள்­ள­னர்.

"இது­த­விர சிறிய அள­வில் புத்­த­கங்­களை வெளி­யி­டும் பதிப்­பா­ளர்­க­ளுக்­காக சிறிய அரங்­கு­களும் திரு­நங்கை பதிப்­பா­ளர்­க­ளுக்கு என சிறப்பு அரங்­கும் அமைக்­கப்­பட்டு உள்­ளன," என்­றார் வயி­ர­வன்.

புத்­த­கக் காட்­சி­யா­னது தின­மும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடை­பெ­றும் என்­றும் தமி­ழக அர­சின் பாட­நூல் நிறு­வ­னம், உல­கத் தமி­ழா­ராய்ச்சி நிறு­வ­னம், மத்­திய அர­சின் சாகித்ய அகா­டமி, தஞ்சை தமிழ் பல்­க­லைக்­க­ழ­கம் உள்­பட பல்­வேறு நிறு­வ­னங்­கள் கலந்துகொள்­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

"இது­த­விர பல்­வேறு நாடு­கள், இந்­தி­யா­வின் பல்­வேறு மாநி­லங்­களில் இருந்­தும் புத்­தக விற்பனை­யா­ளர்­கள், பதிப்­பா­ளர்­கள் புத்­த­கக்­காட்­சி­யில் கலந்துகொள்­கின்­ற­னர்," என்றார் வயிரவன்.