சென்னை தமிழக காவல் துறை நவீன முறையில் குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
அரசு, காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் அவர் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, மாவட்ட வாரி யாக குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்து, அவர் தமது ஆலோ சனைகளை முன்வைத்தார் என தமிழக அரசு வெளி யிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"நிலுவை வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும், நவீன முறைகளில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.

