10,000 ஊர்க்காவல் படையினர் உட்பட 100,000 காவலர்கள் மக்கள் பாதுகாப்புக்கு குவிப்பு 2023 புத்தாண்டை வரவேற்க காவல்துறை கட்டுப்பாடுகள்

10,000 ஊர்க்காவல் படையினர் உட்பட 100,000 காவலர்கள் மக்கள் பாதுகாப்புக்கு குவிப்பு 2023 புத்தாண்டை வரவேற்க காவல்துறை கட்டுப்பாடுகள்

2 mins read

சென்னை: நாளைய நள்­ளி­ர­வில் 2023ஆம் ஆண்டு பிறக்­க­வுள்ள நிலை­யில், அதனை வர­வேற்க பொது­மக்­கள் தயா­ராகி வரு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டத்­துக்கு கட்­டுப்­பாடு களை அறி­வித்­துள்ள தமி­ழ­கக் காவல்­துறை, இரவு ஒரு மணிக்கு மேல் பொது இடங்­களில் புத்­தாண் டைக் கொண்­டாடி மகிழ அனு­மதி இல்லை எனத் தெரி­வித்­துள்­ளது.

இப்­புத்­தாண்டை வீட்­டி­லி­ருந்த படியே குடும்­பத்­து­டன் கொண்­டாடி மகி­ழும்­படி பொது­மக்­களைக் கேட்­டுக்­கொண்­டுள்ள தமி­ழ­கக் காவல்­துறை, நாளை இரவு பொது இடங்­க­ளி­லும் சாலை­க­ளி­லும் கூட்­டம் கூடு­வ­தைத் தவிர்க்­க­வேண்­டும் என­வும் அறி­வு­றுத்தி உள்­ளது.

சென்­னை­யில் மெரினா கடற்­கரை உள்­ளிட்ட இடங்­களில் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டங்­கள் களை­கட்­டு­வது வழக்­கம்.

இந்­தச்­சூ­ழ­லில், புத்­தாண்டுக் கொண்­டாட்­டம் தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் குறித்து தமி­ழக காவல்­துறை சார்­பில் அறிக்கை வெளி யிடப்­பட்­டுள்­ளது.

அதில், நாளை இரவு புத்­தாண்டு பிறக்­கும் நேரத்­தில் பொது­மக்­கள் கடல் நீரில் இறங்கி கொண்­டாட்­டங்­களில் ஈடு­ப­டக் கூடாது.

பைக் சாக­சங்­கள் உள்­ளிட்ட ஆபத்­தான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வோர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

மது அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டக் கூடாது. மீறு­ப­வர்­கள் கைது செய்­யப்­படுவார்கள். அத்துடன், அவர்­க­ளது வாக­னமும் பறி­மு­தல் செய்­யப்­படும்.

வழி­பாட்­டுத் தலங்­க­ளுக்கு உரிய பாது­காப்பு வழங்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் குழப்­பம் விளை­விக்க முயல்­ப­வர்­கள் கட்­டா­யம் கைது செய்­யப்­ப­டுவர் என்­றும் கூறப்பட்டுள்ளது.

கேளிக்கை விடு­தி­களில் புத் தாண்­டுக் கொண்­டாட்­டங்­கள் தொடர்­பான காவல்­து­றை­யின் அனைத்து நிபந்­த­னை­க­ளை­யும் கட்­டா­யம் கடைப்­பி­டிக்க வேண்­டும் என­வும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இப்­புத்­தாண்டை ஒட்டி நாளை மாலை முதல் தமி­ழ­கம் முழு­வ­தும் 10,000 ஊர்க்­கா­வல் படை­யி­னர் உட்­பட ஒரு லட்­சம் காவ­லர்­கள் மக்களுக்கான பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட உள்­ள­னர்.

மோட்­டார் வாக­னங்­களில் நீண்ட தூரம் பய­ணம் செய்­யும் காவ­லர் கள், மூன்று மணி நேரத்­திற்கு ஒரு­முறை பாது­காப்­பான இடங்­களில் வாகனங்களை நிறுத்தி தேநீர் அருந்­த­லாம். இதற்­காக நெடுஞ்­சா­லை­களில் உள்ள கடை­கள் இரவு முழு­வ­தும் திறந்­தி­ருக்­கும் என்­றும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அசம்­பா­வி­தம் இல்­லாத, விபத்­தில்­லாத புத்­தாண்­டைக் கொண்­டாடுவதற்கு பொது­மக்­க­ள் ஒத்­து­ழைப்பை நல்கவேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் கேட்­டுக் கொள்ளப்பட்­டுள்­ளது.