சேலம்: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழுக் கரும்பு ஒன்றை வழங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனை வரவேற்றுள்ள சேலம், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
பொங்கல் தொகுப்புடன் வழங்குதவற்கான செங்கரும்பை கூட்டு றவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து வழங்கவேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாண்டு பொங்கல் பண்டிகைக்கு இரண்டு கோடியே 19 லட்சம் அட்டைதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 1,000 ரூபாய் ரொக்கம் வழங் கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த தொகுப்பு டன் கரும்பையும் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி ஆகி யோருடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழுக் கரும்பு ஒன்றையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டார்.
கும்பகோணம், குமாரப்பாளையம் விவசாயிகள் இதனைப் பாராட்டி உள்ளனர்.
தமிழக அரசின் கரும்பு கொள்முதலுக்கு நன்றி தெரிவித்துள்ள பல்லடம் பகுதி விவசாயிகள், அடுத்த ஆண்டு முதல் இரண்டு கரும்புகளை வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்த அறிவிப்புக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு. செல்வபெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் பாராட்டி உள்ளன.

