'ஐந்து நாட்டுப் பயணிகளுக்கு 100% சோதனை'

'ஐந்து நாட்டுப் பயணிகளுக்கு 100% சோதனை'

2 mins read

மதுரை: பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று ஒரு­வ­ரி­டம் இருந்து 17 பேருக்கு வேக­மா­கப் பர­வும் தன்மை கொண்­ட­தால், பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது அவ­சி­யம் என பொது சுகா­தா­ரத் துறை அறி­வு­றுத்தி உள்­ளது.

இச்­சூ­ழ­லில், திருச்சி, மதுரை போன்ற அனைத்­து­லக விமான நிலை­யங்­க­ளுக்கு வரும் பயணி களுக்கு ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­தனை செய்­யப்­பட்டு வரு­கிறது.

அத்­து­டன், சீனா, தைவான், ஜப்­பான், ஹாங்­காங், தென்­கொரியா ஆகிய ஐந்து நாடு­களில் இருந்து வரு­கின்ற பய­ணி­கள் அனை­வ­ரை­யும் 100% பரி­சோ­தனை செய்ய வேண்டும் என்ற முதல்­வர் மு.க. ஸ்டா­லின் வழி­காட்­டு­த­லின்­படி பரி­சோ­தனை செய்­யப்­பட்டு வரு­கிறது.

இத­னி­டையே, சீனா­வில் இருந்து இலங்கை வழி­யாக மதுரை வந்த இரு­வ­ருக்கு கொரோனா உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில், வெளி நாடு­களில் இருந்து சென்னை வந்த மேலும் இரு­வ­ருக்கு பாதிப்பு கண்ட றியப்­பட்­டுள்­ள­தாக மக்­கள் நல்­வாழ் வுத் துறை அமைச்­சர் மா. சுப்­பிர மணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

"கம்­போ­டியா, துபா­யில் இருந்து வந்த தலா ஒரு­வ­ருக்கு தொற்­றின் பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்பட்­டுள்­ளது. அவர்­களில் ஒரு­வர் ஆந்­திர மாநி­லம், கடப்­பா­வைச் சேர்ந்­த­வர். மற்­ற­வர் பல்­லா­வ­ரம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்," என மா. சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­னார்.

சீனா­வில் இருந்து மது­ரைக்கு வந்­த­வர்­க­ளின் மாதி­ரி­கள் சென்னை ஆய்­வ­கத்­தின் மர­பணு பகுப்­பாய்­வுக் கூடத்­தில் ஆய்வு செய்­யப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் மேலும் கூறி­னார்.

ரத்த ஓவி­யத்­துக்கு தடை

தொடர்ந்து பேசிய அவர், "ரத்­த­தா­னம் என்­பது பல உயிர்­களைக் காப்­ப­தற்­குப் பயன்­ப­டு­கிறது. அத­னைப் பயன்­ப­டுத்தி ஓவி­யம் வரை­வது சரி­யான அணு­கு­முறை அல்ல. ரத்த ஓவி­யம் வரை­வ­தற்­குத் தமிழ்­நாட்­டில் தடை விதிக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறிய அவர், மீறி­னால் சம்­பந்­தப்­பட்ட மையங்­கள் மூடி முத்­திரை வைக்­கப்­படும்.

"ரத்­தத்தை படம் வரை­வதற்­குப் பயன்­ப­டுத்­தும்­போது, எச்­ஐவி போன்ற நோய் பாதிப்­பிற்கு உள்­ளா­ன­வர்­க­ளி­ட­மி­ருந்து ரத்­தம் பெறப்­பட்­டி­ருந்­தால் அது பல­ரை­யும் தாக்கி, பாதிப்­பிற்­குள்­ளாக்­கும். எனவே, இத்தொழிலை நிறுத்­திக் கொள்ளவேண்­டும்," எனவும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.