சென்னை: சென்னையில் சம்பளம் வழங்குவதில் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்தவேண்டும் என் பதை வலியுறுத்தி, 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதன்பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரி யர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு இருந்து வருகிறது.
இந்த முரண்பாட்டை சரிசெய்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் கடந்த 27ஆம் தேதிமுதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் நேற்றும் தொடர்ந்ததை அடுத்து 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

