சென்னை: வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு போலிச் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பில், நாடு முழுவதும் 91 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். பல்வேறு மாநில மருத்துவ மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், இந்திய மருத்துவ மன்ற நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.
அத்துடன், வெளிநாட்டில் மருத்துவம் படித்த பட்டதாரிகள் 73 பேர் மீதும் சிபிஐ வழக்குப்பந்து விசாரணை நடத்தி வருகிறது.

