சென்னை: தென்காசி அருகே பழைய குற்றால அருவியில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வயது குழந்தையைப் பத்திரமாக மீட்ட இளைஞருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் பழைய குற்றால அருவியில் நூற்றுக்கணக்கானோர் நேற்று முன்தினம் குளித்துக்கொண்டிருந்தனர். கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்ப வரும் தனது குடும்பத்தினருடன் அருவியில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த அவரது நான்கு வயது பெண் குழந்தை தமிழினி, அருவி நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதைப் பார்த்த சிலர் சத்தம் போட்டதை அடுத்து, விஜயகுமார் என்ற இளைஞர் அருவியில் துணிச்சலுடன் இறங்கி குழந்தை யைப் பத்திரமாக மீட்டார். சாதுர்யமாகச் செயல்பட்டு குழந்தையைக் காப்பாற்றிய இளையருக்கு அங்கு இருந்தவர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
தாயுடன் சிறுமி தமிழினி. குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர் விஜயகுமார்.
படங்கள்: ஊடகம்

