போலி மருத்துவர்களைக் கண்டறிய நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

போலி மருத்துவர்களைக் கண்டறிய நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் போலி மருத்­து­வர்­களைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­ம­டைந்­துள்ள­தாக காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந்­திர பாபு தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் மருத்­துவ கருத்­த­ரங்கு ஒன்றைத் தொடங்கி வைத்­துப் பேசிய அவர், தமி­ழ­கத்­தில் உண்­மை­யான சேவை மனப்­பான்மை கொண்­டுள்ள மருத்­து­வர்­கள் அரசு மருத்­து­வ­ம­னை­களில்­தான் அதி­க­மாக உள்­ள­னர் என்­றார்.

"தற்­போது லட்­சக்­க­ணக்­கான இளை­யர்­கள் மருத்­து­வ­ராக வர­வேண்­டும் என்று நினைக்­கி­றார்­கள். இது நல்ல வளர்ச்சி.

"மருத்­து­வத் துறை­யில் தொழில்­நுட்­பம் பெரு­ம­ள­வில் வளர்ச்சி கண்­டுள்­ளது," என்­றார் டிஜிபி சைலேந்­திர பாபு.

மருத்­து­வர்­கள் நல­மாக இருந்­தால்­தான் பொது­மக்­களும் நல­முடன் வாழ முடி­யும் என்று குறிப்­பிட்ட அவர், தமக்­கும் மருத்­து­வ­ராக வேண்­டும் என்ற விருப்­பம் இருந்­தது என்­றார்.

எனி­னும் பின்­னர் மக்­களைக் காக்­கும் காவல்­துறை அதி­கா­ரி­யா­கி­விட்­ட­தாக அவர் தெரி­வித்தார்.

"தமி­ழ­கத்­தில் போலி மருத்­து­வர்­கள் குறித்த புகார்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. எனவே போலி மருத்­து­வர்­க­ளைக் கண்­ட­றி­வ­தற்­கான சோதனை நட­வ­டிக்­கை­கள் அதி­க­ரிக்­கப்­படும்," என்று டிஜிபி சைலேந்­திர பாபு மேலும் கூறி­னார்.