சென்னை: கடந்த ஓராண்டில் மட்டும் தமிழக காவல்துறை யின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் 259 சிலைகளை மீட்டுள்ளனர்.
அவற்றுள் 140 உலோகச் சிலைகள், 33 கல் சிலைகள், ஒரு மரச் சிலை ஆகியவை அடங்கும்.
கடந்த ஓராண்டில் சிலை திருட்டு, கடத்தல் தொடர் பாக 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 45 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பல்வேறு நாடுகளில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

