48,593 விவசாயிகளுக்கு தமிழக அரசு ரூ.50.80 கோடி நிவாரணம்
மயிலாடுதுறை: அண்மைய மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 48,593 விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்குகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 32,533 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதாக வும் அம்மாவட்டத்தில் 40,031 விவசாயிகளுக்கு இடு பொருள் நிவாரணமாக ரூ.43.92 கோடி வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது. கடலூர், திருவாரூர், அரிய லூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் 5,222 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,562 விவசாயிகளுக்கு ரூ.6.97 கோடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய அழைப்பிதழால் அதிமுகவில் சலசலப்பு
சென்னை: அதிமுகவின் இரட்டைத் தலைமையைக் குறிக்கும் வகையில் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு, தமிழகத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அழைப்பிதழ் அனுப்பியுள்ளாா். அதிமுகவில் இரட்டை தலைமையால் உள்கட்சிப் பூசல் நிலவுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சி தொடா்பான விவகாரத்தில் தோ்தல் ஆணையம் எடுப்பதே இறுதி முடிவாக இருக்கும். எனவே தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள அழைப்பிதழ் புது விவாதங்களை எழுப்பி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கைக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

