'கொரோனா இல்லை' சான்று கட்டாயமாகிறது

'கொரோனா இல்லை' சான்று கட்டாயமாகிறது

2 mins read

சென்னை: சீனா, சிங்­கப்­பூர், தாய்­லாந்து உள்­ளிட்ட ஆறு நாடு­களில் இருந்து தமி­ழ­கத்­துக்கு வரும் பய­ணி­கள் தங்­க­ளுக்கு கொரோனா தொற்று இல்லை என்­பதை உறுதி செய்­வ­தற்­கான சான்­று­களை வழங்க வேண்­டி­யது கட்­டா­ய­மா­கிறது என தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

அனைத்து பய­ணி­களும் ஆர்டிபி­சி­ஆர் பரி­சோ­தனை மேற்­கொண்டு அதற்­கு­ரிய சான்றை வைத்­தி­ருக்க வேண்­டும் என்­றும் ஜன­வரி 1 (இன்று) முதல் இந்த நடை­முறை கட்­டா­ய­மாக்­கப்­படு கிறது என்­றும் தமி­ழக பொது சுகா­தா­ரத் துறை இயக்­கு­நர் செல்வ ­வி­நா­ய­கம் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், பல்­வேறு நாடு­களில் மீண்­டும் கொரோனா தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்து வரு­வதை அடுத்து, நோய் தடுப்பு நட­வ­டிக்­கை­களில் சில வழி­காட்டு­தல்­கள் திருத்தி அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, சிங்­கப்­பூர், தாய்­லாந்து, தென் கொரியா, ஜப்­பான், ஹாங்­காங் ஆகிய பகு­தி­களில் இருந்து வருவோருக்கு கட்­டாய கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளு­மாறு மத்­திய அரசு அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

"குறிப்­பிட்ட ஆறு நாடு­களில் இருந்து தமி­ழ­கத்­துக்கு வருவோா் தாங்­கள் பய­ணிப்­ப­தற்கு 72 மணி நேரத்­துக்­குள்­ளாக கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்ள வேண்­டும். தமி­ழ­கத்­துக்கு வந்­த­தும் அதற்­கான சான்றை சமா்ப்­பிக்க வேண்­டும்.

"அனைத்­து­லக பய­ணி­களில் தோரா­ய­மாக இரண்டு விழுக்­காட்டி­ன­ருக்கு கொரோனா பரிசோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்படும். தடுப்­பூசி முறை­யாக செலுத்தி­ய­தற்­கான சான்­று­களைக் காண்­பித்­தல் அவ­சி­யம்," என்று செல்­வ­வி­நா­ய­கம் தெரி­வித்­துள்ளார்.

தமி­ழக விமான நிலை­யங்­களில் உடல் வெப்­ப­நிலை பரி­சோதனை மேற்­கொள்­ளப்­படும் என்­றும் தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் உள்­ள­வா்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு உரிய பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டுவா் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

மேலும், கொரோனா தொற்று உறு­தி­யா­கும் பட்­சத்­தில் அவர் களது சளி மாதி­ரி­கள் மர­பணு பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­படும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், வெளி­நா­டு­களில் இருந்து வரும் பய­ணி­கள் வீட்­டுக்­குச் சென்­றாலும் தங்­க­ளது உடல் நிலையைக் கண்­கா­ணித்து அறி­கு­றி­கள் இருப்­பின் 104 என்ற சுகா­தா­ரத் துறை எண்­ணுக்குத் தக­வல் அளிக்க வேண்­டும் என அறி­வுறுத்தி உள்­ளார்.

12 வய­துக்­குட்­பட்ட சிறார்­களுக்கு தோரா­ய­மாக பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை என்­றும் தொற்று அறி­குறி­கள் தென்­பட்­டால் ஆா்டிபிசிஆா் பரி­சோ­தனை செய்­யப்­படும் என்­றும் தமி­ழக அரசு கூறி­யுள்­ளது.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் புதிய உரு­மா­றிய கொரோனா தொற்­றுப் பர­வ­லைக் கண்­ட­றி­வ­தற்­கான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக, அன்­றாட தொற்­றுப் பரி­சோ­தனை சுமார் 25% அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், சென்­னை­யில் இருந்து வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லும் பய­ணி­கள் எண்­ணிக்கை குறைந்­து­விட்­டது.

தொற்­றுப் பர­வல் கார­ண­மாக பல்­வேறு உலக நாடு­கள் புதிய கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளன. இதன் கார­ண­மாக வெளி­நாடு செல்­லும் ஆர்­வம் குறைந்­துள்­ள­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.